BLOG
I like to write about stuff I learned. These writing pieces completely reflect my understanding of what I read and learned.
I have posted some of my written works here.
Silambam - The Mother Sport of Southern Asia
Have you ever wondered what the combat forces of ancient India were like?
History tells us about the vast expanses of land that made up the Chola, Chera and Pandya empires in ancient South India.
It's also known that some kings took naval forces and troops all the way to Thailand and Malaysia (see Rajendra I and Virarajendra Chola)
How did the Tamil Emperors manage to win massive wars back in the second century BC?
The answer to that lies in this art form, which is practised in the southern parts of present-day India, the Maldives, Cambodia, Sri Lanka as a decorative martial art.
It was once a war sport that led to the development of modern weapons like knives and spears. What is this skill, with the weight of centuries resting on it, that once determined the might of empires?
It is none other than Silambattam (or) Silambam, which is practised with a wooden cane as a martial art.
When one happens to notice Silambattam alongside renowned martial art forms like Kalari, Karate, and Kung Fu, one would be amazed by the similarities both possess, and note that the techniques of Silambam share common ground.
Where did Silambam come from?
Silambam (Stick Fencing) is an ancient Tamil weapon-based martial art with its origin in Adi Muraigal - an ancient martial art like Kalari. This traditional valorous form is believed to originate from the Pothigai Hills of Tamil Nadu, India.
Today, we know them by a different name; the Western Ghats. Kalari is said to have been first practised by the Sage Agastya. It was a matter of pride to be a practitioner of Silambam, and the art bestowed high social status on the people who taught it.
According to archaeologists, evidence has been found that Silambam was used in the armed forces of Narasimhavarman, the famous Pallava king circa 630 AD (who completed the Mahabalipuram temples) and King Rajaraja I of the Chola dynasty.
During the second century BC, in the reign of King Velpari - a minor ruler who happened to be one of the seven great philanthropists of Tamil Nadu - Silambam as a martial art form seems to have been codified.
It gained widespread use during the wars between him and the Cheras, Cholas and Pandya Kings.
According to manuscripts from Paadaan Thinai of the Purananuru, which speaks of the legendary achievements of the then rulers, as well as the poet Kabilar, said to be a dear friend of King Velpari, Silambam first was adopted by the tribal people of the mountains (Kurinji), and then progressed to the people living in lowland forests and plateaus – Mullai and Marudham.
Silambam has different versions adopted by other tribes according to their usage and the type of cane used. The other significant divisions of Silambam include Kuravanji, Marakanam, Panayeri Mallu, Nagathari, Nagasrian, Kallan Kambu, Eramar Padam, Nagapathinaru.
During the mass excavation project in Adichanallur, Tamil Nadu, Archaeologists found 32 different types of Silambam weapons with a history dating back to 2000 BC, we can find these in the Chennai Archaeological survey museum.
How does it work?
Silambam chiefly consists of poetic verses that are believed to be taught to Sage Agastya by Lord Muruga, the god of Tamil and Commander of the Devas according to Hindu lore.
Students were taught Adi Murai techniques- separate stances and sequences, with and without a stick and several jumping and combat techniques. They were also acquainted with chiropractic techniques, to avoid muscular and skeletal issues.
After training for a year, students could equip themselves with Silambu – a bamboo stick (from which the name of the art originates) nearly as tall as the practitioner, reaching up to their forehead.
For beginner students, Pirambu (a type of grass-like bamboo with less weight) was used.
After incorporating Adi Murai techniques in Pirambu, students were sorted as per their field of specialization in various weapons like Kuru Val (short sword), Val (sword), Kuthu (a brace held in hand), Kazhi (long cane), Vel (scepter with a flat pointed end), Eeti (spear), Iru Val (double sword held in both hands), Maan kombu aka Maaru (a traditional weapon made from the horns of dead deer), Kaththi (Knife).
Stances codified through poetry
Before implementing a technique for a weapon, students are taught with poetic verses explaining the strikes and counter-strikes to defend against an attack from the enemy.
“பின்னங்காலை முன்னே எடுத்து வைத்தால் முடிந்துவிடும் முதலடி”
Explanation: "Moving the hind leg to the front ends the step".
These phrases differ according to the masters, and there are different schools of Silambam based on location. Furthermore, there are different styles in this combat, and according to each weapon, these techniques are used.
The most common techniques used are Varal(an anti-clockwise swing of cane), Vettu(clockwise swing of cane), Arupu (cutting the swing in horizontal directions), Thadai(blocks ), Kuthu (attacking the jaw of the opponent by pushing the stick forwards), Naladi(combination of Varal and Vettu to cover all directions), Piralai(jumping and attacking the head of the opponent), Thirugu( twisted stance to defend an attack), etc.
Silambam Today
Silambam practised today consists of two main types, namely, Por Silambu – Silambam used in warfare, Alangara Silambu – Silambam used as a decorative sport, mostly performed in temples and in dramas.
It is touted as having medicinal benefits, including a robust increase in lung capacity and activation of all major muscles in the human body.
There are references in Patharthana Guna Sindamani, Kambusuthiram, Kurunthadi Silabam, Nadasari - ancient Tamil books of medicine - that lists the medicinal benefits of Silambam.
Such knowledge, along with resources needed to learn further, are mainly transferred to students through their gurus through auditory and practical means.
There is folklore in different villages of Tamil Nadu, each with its own way of interpreting this information.
This article was published under SPIC MACAY NIT-T Chpater's blog, penned by me.
நவீன தமிழ் (பகுதி 1)
தமிழ் மொழியானது, கடந்த ஈராயிரம் ஆண்டுகளாக பல்வேறு கோணங்களில் பரிணாம வளர்ச்சியினைக் கண்டுள்ளது.
சங்ககால இலக்கியங்கள் முதல் இன்றைய புதினங்கள் வரை, எண்ணற்ற களங்களில் தமிழின் பங்களிப்பு உள்ளது.
இன்றைய தலைமுறையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்க்கேற்ப, இன்றைய தமிழ் இலக்கியங்கள் பலவகையில் மாற்றமடைந்துள்ளன, எடுத்துக்காட்டுகளாக புதினம், துளிப்பாக்கள்(ஹைக்கூ கவிதைகள்), வரலாற்று நாவல்கள், பயணக்கட்டுரைகள், அறிவியல் புனைகதைகள், சிறார் நாவல்கள் முதலியவற்றைச் சொல்லலாம்.
நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில், வரலாற்றுப் புதினங்கள் மற்றும் சிறார் புதினங்களின் பங்களிப்பினைச் சுருக்கமாகக் காண்போம்.
வரலாற்றுப் புதினங்கள்:
1940களில், அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம், நாம் இன்று காணும் வரலாற்றுப் புதினங்களின் தொடக்கமாய் அமைந்தது. மேலும், பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன் என கல்கியின் படைப்புகள் நம்மிடையே புதினங்களின் வழி வரலாற்றினை அறியும் ஆவலினை ஏற்படுத்தின.
சோழ மன்னன் பார்த்திபனின் கனவு தொடங்கி, நரசிம்ம பல்லவனின் வாதாபி பயணமும், மல்லை சிறப்பங்களும் படிப்பவரின் கண் முன்னே வந்து நின்றன.
ராஜா ராஜ சோழனின் கடற்படையும், பண்டைய தஞ்சையின் பெருவுடையார் கோவிலும் நம்மை நேரில் அழைத்தன.
அமரர் கல்கியின் வழியில் வந்த பிற்கால எழுத்தாளர்கள், இவ்வகை புதினங்களை மேலும் சிறப்படையச் செய்தனர்.
விக்ரமனின் நந்திபுரத்து நாயகி, 1960களில் வெளிவந்த சாண்டில்யனின் யவன ராணி, கடல் புறா போன்றவை, மக்களிடையே வரலாற்றினைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தினை மேலும் அதிகப்படுத்தின.
வரலாற்று நாவல்களின் புதியதொரு பரிணாமமாய் ஜூனியர் விகடனில் தொடராய் வெளிவந்த ‘வந்தார்கள் வென்றார்கள்‘, நம் இந்தியாவின் சமீபத்திய வரலாற்றினை மேலும் மக்கள் அறியும் வகையில் அமைந்தது.
1994 ஆம் ஆண்டு ஒரு முழு தொகுப்பாய் வெளிவந்த இந்நூல், பல்வேறு தரப்பு மக்களிடம் பாராட்டுகளைப் பெற்றது. நம் பாரதத்தை நோக்கிய தைமூரின் பேராசையும், அதே பாரத்தினை அன்பாலும் பண்பாலும், கலாச்சார ஒற்றுமையினாலும் வழிநடத்திய அக்பரின் ஆட்சியில் நாம் இருக்கவிலையே என்ற ஏக்கத்தினை நம்மிடையே தோற்றுவிக்கும் வகையில் அமைந்தது இந்நூல்.
மேலும் ஆன்மிக நிகழ்வுகளின் அடிப்படையினைக் கொண்டு திரு வேணுகோபாலன் எழுதிய திருவரங்கன் உலா மற்றும் பல நூல்கள், பண்டைய தமிழகத்தில் ஆன்மிகத்தின் பங்கையும், ஆன்மிகத்தில் தமிழ் கண்ட வளர்ச்சியையும் எடுத்துரைத்தன.
நம் தசாப்தத்தின் பங்களிப்பாய், திரு சு. வெங்கடேசன் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி நூல், இன்றைய இளம் தலைமுறையினர், தங்கள் வரலாற்றினை மேலும் அறிந்துகொள்ளவும், தங்கள் குடியின் பண்டைய சிறப்புகளை அறிந்துகொள்ளவும் பேருதவியாக அமைந்தது.
கபிலரின் காலந்தொட்டே மொழி அறிந்த மாந்தரை வணங்கும் பண்பும், நம் பண்டைய வீரக்கலைகளான சிலம்பும், அடிமுறையும், எவ்வித நோயினையும் குணப்படும் சித்த வைத்திய முறைகளையும் நம் கண் முன்னே கொண்டுவருவது இந்நூலின் சிறப்பு.
பள்ளி மாணவர்கள் முதல் பெரியோர் வரை நம் வரலாற்றினை அறிந்துகொள்ள வேண்டும் என்பதை இந்நூல்களின் ஆசிரியர்களும், தமிழ் ஆர்வலர்களும் நமக்கு கூறும் அறிவுரை என்பதாக உணர்ந்துகொள்ளுதல் தகும்.
சிறார் நாவல்கள்:
நம் பள்ளிப் பருவத்தில், செய்தித்தாளில் வந்த அம்புலி மாமா சித்திரக் கதையினை நாம் மறந்திருக்க மாட்டோம்.
நாம் பள்ளியில் பேசி மகிழ்ந்த கதைகளின் எண்ணிக்கை கணக்கரிய முடியாதது.
அவ்வரிசையில் இன்றைய இளம் பிள்ளைகள் படிக்கும் வகையில் எண்ணற்ற சிறார் நாவல்கள் வெளிவந்துள்ளன.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாய், ஜெயமோகனின் எழுத்தில் வெளிவந்த பனிமனிதன், வெள்ளி நிலம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இவை நற்கருத்துகளுடன், அறிவியலையும் எளிய நடையில் விளக்குகின்றன. வட மற்றும் வடகிழக்கு இந்தியாவின் பூர்வீக குடிகள் மற்றும் அவர்களின் உணவு முறைகளையும் நாம் அறியலாம்.
சார்லஸ் டார்வின் அன்று கூறிய பரிணாமக் கொள்கையினை மாணவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் விளக்குவது டாக்டர் திவாகர் கதாபாத்திரத்தின் சிறப்பு.
வெள்ளி நிலத்தில் உடன் வரும் நோர்பா மற்றும் டாக்டர். நரேந்திர பிஸ்வாலில் கதாபாத்திரங்கள், இன்றைய தொழில்நுட்பங்களை எளிமையாக பரிமாறிக்கொள்வது சிறார்களுக்கு ஆர்வத்தைஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இந்திய கலாச்சாரத்தை எளிமையான நடையிலும், நாம் அன்றாடம் பின்பற்றும் உணவு முறைகள், இந்தியாவில் உள்ள பல்வேறு மதங்களின் தோற்றத்தையும் பழக்க வழக்கங்களில் இருக்கும் அறிவியலை சிறார்களின் பார்வையில் விலகும் டாக்டர் நரேந்திர பிஸ்வாலின் கதாபாத்திரம், நம்முடன் ஒரு ஆசிரியர் இருப்பதுபோல் உணரச்செய்கிறது.
கேப்டன் பாண்டியன் மற்றும் குழுவினர் செல்லும் சாகச பயணங்கள் படிக்கும் அனைவர்க்கும் தீராத ஆர்வத்தினை தூண்டுகின்றன.
நம் நாட்டின் நிலப்பரப்பையும் கண் முன்னே கொண்டு வரும் ஹெலிகாப்டர் பயணமும், மக்களின் பன்முகத்தன்மையை அறிய இந்நூலினை கையேடாக கொள்ளலாம் என்றால் மிகையாகாது.
இவ்வாறு எண்ணற்ற சிறப்பான சிறார் புதினங்கள் தமிழில் வெளிவருகின்றன. குழந்தைகளிடம்,மாணவர்களிடம் சிறு வயதிலிருந்தே வாசிப்புப் பழக்கத்தினை வளர்த்தெடுப்பதில் இத்தகைய சிறார் புதினங்கள் பெரும்பங்காற்றுகின்றன.
This article was published under Tamil Mandram NIT-T's blog, penned by me.